இந்தியா

தற்கொலை செய்துகொள்வதற்கான சிறந்த வழி எது? - கூகுளில் தேடிய இளைஞரை மீட்டது போலீஸ்

28th Sep 2023 04:39 PM

ADVERTISEMENT


மும்பை: 'தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி' எது என கூகுளில் தேடுவதாக இண்டர்போலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து 28 வயது இளைஞரை மும்பை போலீசார் கண்டுபிடித்து அவரது உயிரை காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அந்த இளைஞர் பிரபல தேடுபொறியான கூகுளில் 'தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி' எது என பலமுறை தேடியுள்ளார். இதுகுறித்து சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இண்டர்போலுக்கு தகவல் தெரிவித்துள்ளது கூகுள்.  

இதையடுத்து இளைஞரின் இருப்பிடத்தை அறிந்து, 2 மணி நேரத்தில் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது இண்டர்போல். 

இதையும் படிக்க | பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!

ADVERTISEMENT

இண்டர்போல் பகிர்ந்த செல்போன் எண் தகவலின் அடிப்படையில், அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு பிரிவு போலீசார் விரைந்து சென்று மும்பை புறநகர் பகுதியான மல்வானியில் இருந்து செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனர். 

இதுகுறித்து அந்த இளைஞரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆறு மாதங்களாக வேலையில்லாமலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குற்ற வழக்கு ஒன்றில் மும்பையில் உள்ள சிறையில் உள்ள தனது தாயை மீட்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானதால் மனஅழுத்தத்தில் இருந்த நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் மனதில் தோன்றியதால்,  இந்த முடிவை எடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT