மாதேபுரா: சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் பீகார் மாதேபுரா மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.
கடந்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கேங்டாக்கில் உள்ள பள்ளிக்கு வெளியே சிறுவன் கடத்தப்பட்டான் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
அதே வேளையில் கேங்டாக்கில் கடத்தப்பட்ட சிறுவன் மாதேபுராவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக சிக்கிம் காவல்துறையிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது அடுத்து அவனை தேட தனிப்படை அமைக்கப்பட்டது.
சிறுவனை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் சுசா காவல் நிலையப் பகுதியில் கைது செய்யப்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர் காவல்துறையினர். சிறுவனை மீட்ட போது சிறுவனை அவர்கள் பிணைக்கைதியாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
மீட்பு குறித்து சிக்கிம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதே வேளையில் சிறுவனை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு வருகின்றன.