மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில்,
வடகிழக்கு மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு காரணம் பாஜக தான். இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பதற்றம் சற்று தணிந்த நிலையில், காணாமல் போன இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் மக்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க: நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!
147 நாள்களாக மணிப்பூர் மக்கள் அவதிப்படுகின்றனர், ஆனால் பிரதமர் மோடிக்கு அங்குச் செல்ல நேரமில்லை. கொடூரமான படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சண்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஆயுதம் ஏந்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அழகிய மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பாஜக தான் காரணம். பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரை முதலில் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதுவே மணிப்பூர் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.