உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது.
தேடுதல் ஜாம்பவானான கூகுள் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நமது தேவையோ அறிந்து நமக்கு உரியத் தகவலை அளிக்கும் கூகுள் கடவுள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தினசரி பயன்பாட்டில் கூகுளுக்கு முக்கியப்பங்கு உண்டு. எதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினாலும், அதற்கு முதல் நுழைவாயிலாக இருப்பது இந்த தேடுபொறி தளம் தான். அவ்வளவு பிரசித்தமான கூகுள் தனது 25-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.
படிக்க: பிகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்: என்ன காரணம்?
சரி, அப்படிப்பட்ட கூகுளை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகிய இருவரால் கடந்த 1998-ல் இதேநாளில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பயனாளர்களைப் பெற்றிருக்கும் கூகுள், தன்னை ஒவ்வொரு வருடமும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கூகுள் வரைபடம் மூலம் உலகிற்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக எங்களுடன் பயணித்ததற்காகப் பயனர்களுக்கு நன்றி. எதிர்காலம் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூகுள் டூடுல் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.