இந்தியா

மழைக்காலத்தில் 410 மாவட்டங்களில் வறட்சி: என்னவாகும் உணவு கையிருப்பு?

27th Sep 2023 12:44 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், சுமார் 410 மாவட்டங்கள் வறட்சி நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் தென்மேற்குப் பருவமழைக் காலம் முடிந்திருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

410 மாவட்டங்கள் என்றால், நாட்டின் (50 சதவீதம்) பெரும்பாதி பகுதி. ஏற்கனவே, கடந்த ஆண்டு இயற்கை சீற்றம், பேரழிவு காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டிலும் வறட்சி நிலை, மற்றும் கனமழை காரணமாக விவசாயம் பாதிப்பு போன்றவை நாட்டின் உணவு இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

இதையும் படிக்க | 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?

ADVERTISEMENT

இவற்றோடு, இந்த ஆண்டு பருவமழையான வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. நாட்டின் வறட்சி கண்காணிப்பு கருவியான - நிலையான மழைப்பொழிவு குறியீட்டை இந்திய வானிலைத் துறையானது வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஜூன் 1 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரையிலான தென்மேற்குப் பருவமழை பொழியும் நான்கு மாதங்கள், நாட்டின் பெரும்பகுதி மாவட்டங்கள் வறட்சி நிலையிலேயே இருந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நிலையான மழைப்பொழிவு குறியீடு அடிப்படையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்கள், வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் சில பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இந்த மண்டலங்களில் ஒரு சில பகுதிகள் மிகக் கடும் வறட்சி முதல் மிதமான வறட்சி என்ற நிலையை எட்டியுள்ளன.

இதையும் படிக்க.. காலாண்டு விடுமுறை: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

718 மாவட்டங்களில் 41 சதவீதம் மிதமான வறட்சி என்ற நிலையிலும், 9 சதவீத மாவட்டங்கள் பலத்த வறட்சி, 7 சதவீத மாவட்டங்கள் கடும் வறட்சி நிலையில் வகைப்பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, கடந்த பிப்ரவரி மாதம் அதிகரிக்கத் தொடங்கிய கோடைக்காலம், படிப்படியாக அதிகரித்து, செப்டம்பர் மாதம் வரையிலும் பல இடங்களில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் தகித்து வருவதும் இந்த வறட்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT