இந்தியா

தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும்: கேஜரிவால்

27th Sep 2023 05:02 PM

ADVERTISEMENT

 


தேசிய தலைநகரில் உள்ள ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை தயாரிப்புப் பள்ளியில் 32 மாணவர்கள் தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தில்லி முதல் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், 

 தில்லியின் ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை தயாரிப்புப் பள்ளியைச் சேர்ந்த 32 மாணவர்கள் என்டிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ADVERTISEMENT

படிக்க: நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!

ஆயுதப்படை தயாரிப்பு பள்ளி சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது என்றும், தில்லியிலிருந்து அதிகமான மாணவர்கள் எதிர்காலத்திலும் என்டிஏ தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் கூறினார்.

ஒரே வருடத்தில் தில்லியின் ஆயுதப்படை தயாரிப்பு பள்ளி சிறந்த முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் என்டிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று எதிர்கால அதிகாரிகளாக நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும் என கேஜரிவால் பதிவிட்டுள்ளார். 

படிக்க: இந்தியா விரைவில் பொருளாதார சக்தியாக உருவாகும்: மோடி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT