இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்துள்ளது: சஞ்சய் ரௌத்

26th Sep 2023 03:33 PM

ADVERTISEMENT

அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜவிலிருந்து விலகும் என சிவசேனையைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்த நிலையில், அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜவிலிருந்து விலகும் என சிவசேனையைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: ஆனந்த் மஹிந்திரா மற்றும் ஊழியர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: நாங்கள் இந்தியா கூட்டணியை அமைத்த பிறகே அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து ஞாபகம்  வந்துள்ளது. அதற்கு முன்பு வரை மோடி மட்டும் போதும் என அவர்கள் இருந்தார்கள். ஆனால், இந்தியா கூட்டணி அமைந்த பிறகு அவர்களுக்கு மோடி ஒருவர் மட்டும் போதவில்லை. அவர்களுக்கு மேலும் பலரின் ஆதரவு தேவைப்பட்டது. சிவசேனை மற்றும் அகாலி தளம் இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியே இல்லை. சிவசேனை மற்றும் அகாலி தளம் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மையான பலமாக இருந்தது. இப்போது இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்துள்ளது. அதிமுக மட்டுமல்லாது மேலும் பல கட்சிகள் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவும் மூழ்கிவிடும் என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT