இந்தியா

இந்தியாவில் காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: சுகாதார அமைச்சகம்!

26th Sep 2023 03:54 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் காசநோய்க்கு எதிரான மருத்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை உள்ளதாகவும், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய மருந்துகளின் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த தவறான தகவல்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் காசநோய்க்கான மருந்துகள் அனைத்தும் அடுத்த ஆறு மாதங்களுக்கும், அதற்கு மேலும் கையிருப்பில் உள்ளது.

ADVERTISEMENT

காசநோய் உள்ளவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு லைன்சோலிட், சைக்ளோசரின் ஆகிய மருந்துகள் தேவைப்படுகிறது. சில மாநிலங்கள் மாவட்டங்களுக்கு கொள்முதலை வழங்கியுள்ளன அதன்படி, தேவையான இடங்களில் மாவட்டங்கள் கொள்முதல் செய்துள்ளன. 

எனவே, காசநோய் எதிர்ப்பு மருந்துகள் கொள்முதல் செய்தல், சேமித்தல், இருப்பு வைத்தல் மற்றும் சரியான நேரத்தில் விநியோகம் ஆகியவை தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சரியான முறையில் செய்யப்பட்டு வருகின்றது. 

அரிதான சூழ்நிலைகளில், தேசிய சுகாதார இயக்கத்தின்(NHM) கீழ் வரவு செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்நாட்டில் சில மருந்துகளை வாங்குமாறு மாநிலங்கள் கோரப்பட்டன, இதனால் தனிப்பட்ட நோயாளி பராமரிப்பு பாதிக்கப்படாது, என்று அமைச்சகம் கூறியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT