இந்தியா

ம.பி. தேர்தல்: பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

26th Sep 2023 04:40 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. 

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தற்போதே ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அண்மையில் வெளியிட்டது. 

இந்த நிலையில், இன்று மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட அமர்வாரா சட்டமன்றத் தொகுதிக்கான பட்டியலை கட்சி அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் மோனிகா பட்டி போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் கோண்ட்வானா கந்தந்த்ரா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். 

ADVERTISEMENT

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் சிங் படேல் ஆகியோர்  திமானி மற்றும் நரசிங்பூர் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே நிவாஸ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

படிக்க: மாயமான மாணவர்களின் சடலம்: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் பாஜக எம்பி ராகேஷ் சிங் ஆகியோர் இந்தூர்-1 மற்றும் ஜபல்பூர் பாஸ்சிம் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 

எம்.பி.க்கள் கணேஷ் மந்திரி, ராகேஷ் சிங் மற்றும் ரீத்தி பதக் ஆகியோர் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவார். 

முன்னதாக, திங்கள்கிழமை மாலை 39 வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் நான்கு கட்சி எம்பிக்கள் மற்றும் மூன்று மத்திய அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். 

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல்கள் குறித்து விவாதிக்க செப்.13ல் பாஜக மத்திய தேர்தல் குழு தேசிய தலைநகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பிரதமர் மோடி, தேர்தல் குழு உறுப்பினர்கள் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 17ல் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக, 39 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது. மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க: இந்தியாவில் காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: சுகாதார அமைச்சகம்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT