இந்தியா

மணிப்பூரில் மொபைல் இணையதள சேவைகளுக்கு தடை!

26th Sep 2023 09:23 PM

ADVERTISEMENT

 

மணிப்பூரில் செல்போன் இணையதள சேவைகள் 5 நாள்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.  

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், போராட்டத்தை மேலும் பெரிதாக்காமல் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் இணையதள சேவை முடக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக தவறான செய்திகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்க மற்றும் வன்முறைக்கு காரணமாக பிற செய்திகள் பரவுவதைத் தடுத்து சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தற்காப்பதற்காக இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

குழுக்களைச் சேர்க்கவும், வன்முறை செயல்களில் ஈடுபடவும் மிகப்பெரிய குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும். 

இதனால், இன்று மாலை 7.45 மணிமுதல் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 7.45 மணிவரை செல்போன் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT