இந்தியா

ம.பி.யில் காங்கிரஸில் சேர விரும்பும் பாஜக தலைவர்கள்!

25th Sep 2023 02:56 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் பல தலைவர்கள் காங்கிரஸில் சேர விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து குவாலியரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 18 ஆண்டுகளாக ம.பி.யில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் பாவங்களைக் கழுவ முடியும் என்று பிரதமர் மோடி நம்புகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பெரிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் சேர முயற்சித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மத்திய பிரதேச சட்டப்பேரவைப் பதவிக் காலம் 2024 ஜனவரி 6-ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் ம.பி.யில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT