இந்தியா

வெளியுறவுக் கொள்கை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு: மோடிக்கு நவீன் பட்நாயக் பாராட்டு

25th Sep 2023 12:51 PM

ADVERTISEMENT

புவனேஸ்வர்: வெளியுறவுக் கொள்கை, நாட்டில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார். 

டிஎன்ஐஇ குழுமம் சாா்பில் ஒடிஸா இலக்கியத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது. அந்த மாநில தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்கா நினைவாக ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய எழுத்தாளா் பெருமாள் முருகனுக்கு ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதை வழங்கினாா். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

விழாவில் முதல்வா் நவீன் பட்நாயக் பேசுகையில், இயற்கையாகவே எங்கள் மாநிலத்திற்கான வளர்ச்சியை நாங்கள் விரும்புகிறோம், அதில் கவனம் செலுத்தி வருகிறோம். மாநில வளர்ச்சியில் மத்திய அரசையும் ஒரு பங்களிப்பாக வைத்திருப்பது முக்கியம், நாங்கள் மத்திய அரசுடன் நல்ல நட்பு கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பெருமாள் முருகனுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது!

மேலும் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகளுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள் அளித்த பட்நாயக், “வெளியுறவுக் கொள்கை மற்றும் நாட்டில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுகளால் ஊழல் குறைந்துள்ளது மற்றும் நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தன்னால் முடிந்தவரை மோடி முயற்சி செய்துள்ளார். 

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது குறித்து பட்நாயக் கூறுகையில், "இது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன், எனது கட்சி எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கானதாக உள்ளது, எனது தந்தை உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகித இடங்களை ஒதுக்கி அதைத் தொடங்கினார். அதை 50 சதவிதமாக உயர்த்தி, சமீபத்தில் நடந்த தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கினோம்.

"மிஷன் சக்தி என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த திட்டம் எங்களிடம் உள்ளது, அதில் 70 லட்சம் பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பிற வழிகளிலும் பெண்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்" என்று பட்நாயக் மேலும் கூறினார்.

 ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை வரவேற்கிறோம், இரு அமைப்புகளுக்கும் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பட்நாயக் தெரிவித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT