இந்தியா

பிஎஃப்ஐ வழக்கு: கேரளத்தில் அமலாக்கத்துறை சோதனை!

25th Sep 2023 11:51 AM

ADVERTISEMENT

 

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக கேரளத்தின் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

கேரளத்தின் வயநாடு, கோழிக்கோடு மற்றும் கொச்சி உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள அமைப்பு நிறுவனங்கள் மற்றும் அதன் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. 

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடா்புள்ளதாகவும்; நாட்டில் மதரீதியிலான வெறுப்புணா்வை பரப்ப முயற்சிப்பதாகவும் கூறி, பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து, மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் 27-இல் அறிவிக்கை வெளியிட்டது.

ADVERTISEMENT

படிக்க: குஜராத்: பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகித்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

முன்னதாக, பிஎஃப்ஐ தொடர்பான வழக்குகளில் நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT