இந்தியா

குஜராத்: பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்

25th Sep 2023 10:10 AM

ADVERTISEMENT

குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர். 

குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் பழைய பாலத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஆற்றில் விழுந்த நான்கு பேரை கிராம மக்கள் மீட்டனர். 

பின்னர் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. சாலைகள் மற்றும் வீட்டுவசதி துறை பாலம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும், தடையை மீறி டிரக் ஒன்று கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT