இந்தியா

டெங்கு காய்ச்சல் அதிகம் பாதிக்கக்கூடிய நாட்டில் இதுவரை 909 பேர் பலி!

25th Sep 2023 06:10 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கின்றன.

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

வங்கதேசத்தில் டெங்கு பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 1,87,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலையில் 204, ஆகஸ்டில் 342, செப்டம்பரில் 316 என மொத்தம் இதுவரை 909 பேர் காய்ச்சல் பாதிப்புக்குப் பலியாகியுள்ளனர். 

படிக்க: கடன் கொடுக்கத் தவறிய தலித் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

செப்டம்பரில் 63,917, ஆகஸ்டில் 71,9766, ஜூலையில் 43,854 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16 உயிரிழப்பும், 3008 பாதிப்பும் பதிவாகியுள்ளது. நாட்டில் டெங்கு பாதித்து இதுவரை 1,76,346 பேர் குணமடைந்துள்ளனர். 

ஜூன்-செப்டம்பர் பருவமழைக் காலத்தில் வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பருவமாகக் கருதப்படுகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் நோய்க்கு அதிக ஆபத்துள்ள நாடாகக் கருதப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT