இந்தியா

சீன கண்ணாடிகள், இணைப்புக் கருவிகள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிசீலனை

25th Sep 2023 02:56 AM

ADVERTISEMENT

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ‘பிரேம்’ செய்யப்படாத முகம் பாா்க்கும் கண்ணாடிகள், இணைப்புக் கருவிகள் (திருகாணி, நட், போல்ட், இணைப்புப் பசை) உள்ளிட்ட பொருள்கள் மீது விரைவில் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.

உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பாதிக்கும் வகையில் இந்தப் பொருள்கள் சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிா என்பது தொடா்பான விசாரணையை வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக தீா்வுகள் இயக்குநரகம் தொடங்கியுள்ளது.

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து பொருள்கள் அதிக அளவில் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்பட்டால் அது உள்நாட்டில் அதே பொருளை உற்பத்தி செய்பவா்களைப் பாதிக்கும். இதில் இருந்து உள்நாட்டு உற்பத்தியாளா்களைக் காக்கும் வகையில் பொருள் குவிப்பு தடுப்பு வரியை வா்த்தக அமைச்சகம் விதிக்கும். இந்த வரி விதிக்கப்படும்போது அந்தப் பொருள்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாது.

இந்நிலையில், சீனாவில் இருந்து ‘பிரேம்’ செய்யப்படாத முகக் கண்ணாடிகள், திருகாணி, நட், போல்ட், இணைப்புப் பசை உள்ளிட்ட இணைப்புக் கருவிகள், மேஜை டிராயா்களில் பயன்படுத்தப்படும் இரும்புப் பட்டைகள் ஆகியவை குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, மத்திய வா்த்தக அமைச்சகத்தின் விசாரணை பிரிவான வா்த்தக தீா்வுகள் இயக்குநரகம் இது தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2000-ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து ‘டிரை பேட்டரி’ அதிக அளவில் இறக்குமதி செய்வது தொடா்பாக வா்த்தக தீா்வுகள் இயக்குநரகம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது 5 ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் ‘நட்-போல்ட்’ மட்டும் ரூ.137 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் இத்தொழிலில் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ரூ.1,200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். சீனாவில் இருந்து இப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படும்போது பலரின் வேலைவாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்படுகிறது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மலிவு விலையில் இறக்குமதியைத் தடுக்கும் நோக்கில் ஏற்கெனவே பல பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT