இந்தியா

திருப்பதியில் பேட்டரி பேருந்து திருட்டு

24th Sep 2023 11:41 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சாரப் பேருந்தை மர்மநபர் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான ரூ.2. கோடி மதிப்பிலான மின்சாரப் பேருந்தை அதிகாலை 3 மணிக்கு திருமலையில் உள்ள எச்.வி.சி. காட்டேஜ் அருகே நிறுத்திவிட்டு ஓட்டுநர் தேநீர் அருந்தச் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த பேருந்தை திருடிச் சென்றுவிட்டார். 
ஓட்டுநர் தேநீர் அருந்திவிட்டு வந்து பார்த்தபோது பேருந்து காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜி.பி.எஸ்-ஐ கொண்டு தேடி வந்த நிலையில் 90 கி.மீ. தொலைவில் நாயுடுப்பேட்டை அருகே பேருந்து இப்பதைக் கண்டுபிடித்தனர். பேட்டரி பேருந்தை திருடிச்சென்ற மர்மநபர் 100 கி.மீ. சென்ற நிலையில் சார்ஜ் இல்லாததால் விட்டுச் சென்றார். 
இதனிடையே பேருந்தை திருடிச் சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சாரப் பேருந்தை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT