இந்தியா

ராஜஸ்தானில் டிரக் மீது பேருந்து மோதல்: பள்ளி முதல்வர், மாணவி பலி

24th Sep 2023 12:20 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் நின்றுகொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் பள்ளி முதல்வர், மாணவி பலியானார்கள். 

ராஜஸ்தான் மாநிலம், ஜலோரில் நடந்த இசைப் போட்டியில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பார்மரில் உள்ள தேத்தானிக்கு சனிக்கிழமை இரவு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த பேருந்து செஹ்லாவ் கிராமம் அருகே நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பள்ளி முதல்வர், மாணவி ஆகியோர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேத்தானியில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரசு மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் குழு போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜாலோரில் உள்ள ராணிவாடாவுக்கு சென்றுள்ளனர்.

மாணவர்களுடன் முதல்வர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இருந்தனர். படுகாயமடைந்த மூன்று சிறுமிகள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றையவர்கள் பார்மரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் முகமது இப்ராகிம் (50), சமீனா (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT