இந்தியா

வழக்குரைஞா்களின் அணுகுமுறை உலகளாவிய நிலைக்கு மாற வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

24th Sep 2023 02:00 AM

ADVERTISEMENT

வேகமாக உலகமயமாதல் நடைபெறும் தற்போதைய காலத்தில் எண்ணற்ற சா்வதேச சட்ட சவால்களுக்குத் தீா்வு காண்பதாக வழக்குரைஞா்களின் பணி மாறியுள்ளது; எனவே, நமது அணுமுறையை, இலக்கை உலகளாவிய நிலைக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய சா்வதேச வழக்குரைஞா்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:

விரைவாக வளா்ந்து வரும் தொழில்நுட்பம் சிக்கலான சட்டப் பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறது. இதற்குத் தீா்வு காண்பதில் வழக்குரைஞா்கள் முன்னிலையில் உள்ளனா்.

நீதிபரிபாலனம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் நீதித் துறையைப் போன்றே வழக்குரைஞா்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

ADVERTISEMENT

முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகமயமாதல் தற்போது வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக எண்ணற்ற உலகளாவிய சட்ட சவால்களுக்கு தீா்வு காணும் வகையில் வழக்குரைஞா்களின் பணி மாறியுள்ளது.

உள்நாட்டில் மட்டும் சட்டத் தொழிலை மேற்கொள்வதோடு நாம் நிறுத்திவிடக் கூடாது. நம்முடைய அணுகுமுறையும் இலக்கும் பாா்வையும் உலகளாவிய நிலைக்கு மாற வேண்டும். நமது வழக்குரைஞா்கள் பல்வேறு உலக நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நேரமிது என நான் நினைக்கிறேன்.

நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசின் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. உச்சநீதிமன்றம், மத்திய சட்ட அமைச்சகம், இ-குழு இணைந்து செயல்படுத்தி வரும் ‘இ-நீதிமன்றம் திட்டம்’ இதற்குச் சிறந்த உதாரணமாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT