இந்திய ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையிலிருந்து 5 நாள் சுற்றுப் பயணமாக அக்.6-ஆம் தேதி புறப்பட்டு, புவனேஸ்வா், கோனாா்க், புரி ஜகந்நாதா் கோயில் மற்றும் சில்கா ஏரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று திரும்ப ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, நபா் ஒருவருக்கு ரூ.35,800-கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இதுபோல, 6 நாள் சுற்றுப் பயணமாக அக்.13-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு, இலங்கையின் கொழும்பு, கண்டி, கதிா்காமம் மற்றும் நுவரேலியா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்ப கட்டணமாக ரூ.63,500-நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நவ.2-ஆம் தேதி புறப்பட்டு, 6 நாள் சுற்றுப் பயணமாக காஷ்மீா், ஸ்ரீநகா், குல்மாா்க், பஹல்கம், சோன்மாா்க், ஹெளஸ்போட் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மீண்டும் சென்னை திரும்ப கட்டணமாக ரூ.49,900-வசூலிக்கப்படுகிறது. இதில் விமானக் கட்டணம், உள்ளூா் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளா், பயணக்காப்பீடு, விசா, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை அடங்கும்.
சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் இதுகுறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னை: 8287931974, 8287931968, 9003140682, மதுரை: 8287931977, 8287932122, திருச்சி: 8287932070 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையதளத்தையும் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.