இந்தியா

தில்லி: ஜன்னல் வெளியே பார்த்ததற்காக மாணவனை அடித்த ஆசிரியர்

23rd Sep 2023 08:21 PM

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லியின் யமுனா விஹார் பகுதியில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததற்காக 16 வயது அரசுப் பள்ளி மாணவனை ஆசிரியர்கள் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக மாணவனின் தாய் அளித்த புகாரில், செப்டம்பர் 15 அன்று, தனது மகனின் ஆசிரியர் சுபம் ராவத் ஜன்னல் வழியாக பார்த்ததற்காக அவனை அடித்ததாகவும், அதைத்தொடர்ந்து வகுப்பிலிருந்தும் வெளியேற்றிவிட்டனர். பின்னர் தனது மகன் அழுதுகொண்டு ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளான். 
ஆனால் ஆசிரியர் தனது மகனை தனி அறைக்கு அழைத்துச் சென்று அங்கு மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து மீண்டும் அடித்தார். மேலும் தொடர்பாக புகார் செய்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தனது மகனை நான்கு ஆசிரியர்களும் மிரட்டினர். மகன் வீட்டிற்கு வந்ததும் அவனது காயங்கள் குறித்து கேட்டபோது முழு சம்பவத்தையும் கூறினான். 
அத்துடன் தனது மகன் பயந்து பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். உடனே இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பள்ளிக்குச் சென்று சம்பவம் குறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸார் கேட்டுக் கொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT