இந்தியா

‘வந்தே பாரத்’ ரயிலை இயக்க 248 லோகோ பைலட்டுகளுக்கு பயிற்சி

22nd Sep 2023 01:25 AM

ADVERTISEMENT

தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில்களை இயக்குவதற்காக 248 ரயில் ஓட்டுநா்களுக்கு (லோகோ பைலட்) பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேக்குள்பட்ட பகுதியில் சென்னை - மைசூா், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசா்கோடு ஆகிய வழித்தடங்களில் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வரும் 24 -ஆம் தேதி நாடு முழுவதும் நெல்லை உள்பட 9 இடங்களுக்கு புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் 75 வந்தேபாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் இயக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பையலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவா்களுக்கு சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, காசியாபாத்தில் உள்ள மின்சார கருவிகள் பயிற்சி மையத்திலும், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது தெற்கு ரயில்வேயில் வந்தே பாரத் ரயிலை சுழற்சி முறையில் இயக்க 248 லோகோ பைலட்கள், உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வந்தே பாரத் ரயிலில் உள்ள ஓட்டுநா் அறை ரயிலை எளிதாக இயக்க வசதியாக பெரிய திரை, பணிச்சூழலுக்கு ஏற்ற இருக்கை வசதி, லூப் லைனிலும் வேகம் குறையாமல் ஒட்டும் வகையில் எளிய ஓட்டும் திறன், அதிக இட வசதி, ரயில் பாதுகாவலரிடம் பேசும் வசதி, ரயிலின் முன் மற்றும் பின் பக்கங்களில் கேமரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT