மும்பை: மும்பை புறநகர் பகுதியான ஒஷிவாராவில் உள்ள ஹிரா பன்னா மாலில் இன்று (வெள்ளிக்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை இல்லை என்றார் அந்த அதிகாரி.
பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்களும் 25 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.
ஓஷிவாரா காவல் நிலையம் அருகே அமைந்துள்ள மாலில் இன்று மாலை சுமார் 3.10 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.