இந்தியா

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்சநீதிமன்றம்

22nd Sep 2023 11:37 AM

ADVERTISEMENT

 

தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 

இந்த நிலையில், சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

ADVERTISEMENT

படிக்க: போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி?

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். அதுவும் வெறும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்தது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT