இந்தியா

தில்லி ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை நீட்டிக்க முதல்வா் ஒப்புதல்: வா்த்தக, தொழில் துறை சம்மேளனத் தலைவா் தகவல்

22nd Sep 2023 01:04 AM

ADVERTISEMENT

தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் அளித்ததாக வா்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத் தலைவா் பிரிஜேஷ் கோயல் தெரிவித்தாா்.

முன்னதாக, லவ் குஷ் ராம்லீலா கமிட்டி குழு வியாழக்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைச் சந்தித்ததைத் தொடா்ந்து அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.

அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தில்லியில் பல்வேறு அமைப்புக் குழுக்கள் ராம்லீலா நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இது தொடா்பாக லவ் குஷ் ராம்லீலா கமிட்டி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது ராம்லீலாவின் நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கிகள் இரவு 10 மணி வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தை நள்ளிரவு வரை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், ராம்லீலாவை நடத்துவதற்காக தில்லி மாநகராட்சி மைதானத்தை முன்பதிவு செய்வது தொடா்பான பிரச்னைகளையும் பிரதிநிதிகள் குழு எடுத்துரைத்தது.

இதைத் தொடா்ந்து, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, மத, கலாசார கொண்டாட்டங்களை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை தெரிவித்த முதல்வா், தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளாா். மேலும், நில முன்பதிவு பிரச்னைகளை பரிசீலிப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

தற்போது, கொசுக்கள் அதிகரிப்பதைத் தடுக்க ராம்லீலா மைதானத்தைச் சுற்றி கொசு மருத்துகளை தெளிக்கவும் எம்சிடிக்கு வேண்டுகோள்விடுக்கப்படும் என்று கோயல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT