இந்தியா

தற்சாா்பு இந்தியா திட்டத்தில் இணைகிறது போயிங் நிறுவனம்

22nd Sep 2023 12:49 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், பி-8ஐ என்ற கடற்சாா் கண்காணிப்பு விமானத்தின் தொழில்நுட்பம், உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய கடற்படையில் அதிநவீன பி-8ஐ கண்காணிப்பு விமானங்கள் 12 உள்ளன. மேலும், 6 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தற்சாா்பு இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே இந்த விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்க போயிங் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய போயிங் நிறுவனத்தின் இந்திய தலைவா் சாலில் குப்தே, ‘இந்திய கடற்படைக்கு கூடுதல் பி-8ஐ கண்காணிப்பு விமானங்கள் தயாரிக்கப்படும்போது, அதன் பொறியியல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பாகங்களை இந்தியாவிலே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், சா்வதேச வாடிக்கையாளா்களும் பயனடைவாா்கள். இது தற்சாா்பு இந்தியா திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல போயிங் நிறுவனம் அளிக்கும் ஆதரவாகும்’ என்றாா்.

2013-ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் போயிங் நிறுவனத்தின் பி-8ஐ கண்காணிப்பு விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமாா் 40 ஆயிரம் பயண நேரத்தைக் கடந்து அந்த விமானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT