இந்தியா

ராஜஸ்தானுக்கு முன்னுரிமை அளிப்பவர் பிரதமர் மோடி: உத்தரகண்ட் முதல்வர்

21st Sep 2023 03:56 PM

ADVERTISEMENT

 

பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் ராஜஸ்தானுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வியாழக்கிழமை தெரிவித்தார். 

ராஜஸ்தானின் கோடாவில் பரிவர்தன் சங்கல்ப் யாத்ராவில் பங்கேற்ற முதல்வர் தாமி செய்தியாளர்களிடம் கூறியது, 

பிரதமர் மோடி எப்போதும் ராஜஸ்தானுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஆனால் மத்திய அரசு வழங்கும் பட்ஜெட்டை செலவழிக்க விரும்பாத அரசு கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மக்களுக்கு அவர்கள் லாபம் கொடுக்க விரும்பவில்லை. 

ADVERTISEMENT

படிக்க: ஸ்பெயினிலிருந்து துபை சென்றடைந்தார் மம்தா!

கடந்த 24 மணி நேரத்தில் நான் பல இடங்களில் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்றேன். 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய முதல் பெரிய சந்திப்புகளை நடத்தினேன். பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தெய்வீக நம்பிக்கை கொண்ட பெண்களைப் பார்த்தேன். இளைஞர்களிடையே பெரும் உற்சாகமும் ஆற்றலும் இருந்தது. இந்த முறை ராஜஸ்தான் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று நான் நினைக்கிறேன். 

ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் வாக்காளர்களைக் கவர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT