கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சமீபத்தில் பரிசோதிக்கப்பட்ட 24 பேரின் மாதிரிகள் எதிர்மறையாக வந்துள்ளதையடுத்து நீபா வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோழிக்கோட்டில் கடந்த வாரம் நிபா வைரஸ் பாதித்து இரண்டு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கைத் தொடர்ந்து 352-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டது.
நிபா தொற்றுக்கு ஆறு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 952 பேர் கண்காணிப்பில் இருந்தனர். தற்போது சமீபத்தில் பரிசோதிக்கப்பட்ட 24 பேரின் மாதிரிகளும் எதிர்மறையாக வந்துள்ளது.
படிக்க: நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்: ஆந்திரத்தில் அதிர்ச்சி!
இதையடுத்து, கேரளத்தில் நிபா தொற்று காய்ச்சலின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.