இந்தியா

கர்நாடகம்: உறைவிடப் பள்ளியின் சுவர் இடிந்து சிறுவன் பலி, இருவர் காயம்!

21st Sep 2023 05:52 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். 

பிடாதி அருகே எச்.கொல்லஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள உறைவிடப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்றது. 

உயிரிழந்த மாணவன் உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசிக் கௌடா ஆவார். காலையில் முகம் கழுவிக்கொண்டிருந்த கௌசிக் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது.

ADVERTISEMENT

தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்ட மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

படிக்க: நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்: ஆந்திரத்தில் அதிர்ச்சி! 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT