இந்தியா

இதழியலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம்: ஆபத்தா, வாய்ப்பா?

21st Sep 2023 02:16 PM

ADVERTISEMENT

செயற்கை நுண்ணறிவு(செய்யறிவு) தொழில்நுட்பம் இதழியல் துறைக்கு அச்சுறுத்தல் மற்றும் வாய்ப்பு என இரண்டு விதமாகவும் இருக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்யறிவு தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் அனைத்துத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் செய்யறிவு தொழில்நுட்பம் இதழியல் துறைக்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்ற கோணத்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் இதழியல் துறை ஆய்வு நடத்தியது.

கடந்த ஏப்ரல் - ஜூலை மாதங்களுக்கு இடையே 46 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களில் செய்யறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி செய்யறிவு தொழில்நுட்பம் இதழியல் துறைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும், அதேநேரத்தில் வாய்ப்பாகவும் இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ஷவர்மாவில் என்ன ஆபத்து?

சாட்ஜிபிடி, கூகுள் பார்டு மூலமாக ஏ.ஐ. செய்திகளை எழுதுவதாகவும் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதாகவும் 80% பேர் கூறினாலும், 60% பேர் தங்களுக்கும் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்

அதாவது செய்யறிவு தொழில்நுட்பம் நேரத்தை மிச்சப்படுத்தும் என்றாலும் அதில் உள்ள சாத்தியக் கூறுகள், தகவல்களில் துல்லியத்தன்மை,  வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட தொழில் நெறிகளில் பிரச்னைகள் வரலாம் என்று கூறுகின்றனர். செய்யறிவு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு செய்தியை செய்தியாளர்கள் சரிபார்க்கும் நிலை இருக்கும் என்று தெரிய வருகிறது. 

உலகெங்கிலும் உள்ள இதழியல் துறை மற்றொரு அற்புதமான, அதேநேரத்தில் பயமுறுத்தும் தொழில்நுட்பமாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது என்று ஆய்வின் இணை ஆசிரியரும் திட்ட இயக்குனருமான சார்லி பெக்கெட் கூறினார். 

செய்யறிவு தொழில்நுட்பம் என்பது பத்திரிகை மற்றும் செய்தி ஊடகத்தின் நெறிகளுக்கு(ethics) ஓர் அச்சுறுத்தல் என்றும், ஆனால் மேலும் திறமையாக பயனுள்ள நம்பகமானதாக மாற்றுவதற்கான ஒரு நம்ப முடியாத வாய்ப்பு என்றும் தெரிவித்தார். 

நேர்காணல் செய்திகளை எழுதுவது போன்ற பணிகளில் செய்யறிவு தொழில்நுட்பம் நேரத்தை மிச்சப்படுத்தும் என ஒப்புக்கொண்டுள்ள பத்திரிகையாளர்கள், துல்லியத்தன்மை மற்றும் துறை சார்ந்த நெறிகளுக்காக சரிபார்க்க வேண்டிய சூழல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அடுத்து மொழி ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கும் என்கிறது இந்த ஆய்வு. ஏனெனில் தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் எளிதாகக் கிடைக்கும் நிலையில் உலகளவில் அனைத்து மொழிகளிலும் கிடைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 

இதையும் படிக்க | நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு இந்த பிரச்னை அதிகமாக இருக்குமாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT