இந்தியா

1952 முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு?

20th Sep 2023 05:41 PM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 1952 முதல் தற்போது வரை நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு? 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேஹ்வால் மக்களவையில் நேற்று(செப். 19) தாக்கல் செய்தார.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.

மசோதா நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே இது நடைமுறைக்கு வரும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

1996 ஆம் ஆண்டு தேவ கௌடா அரசு முதல்முதலில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது. அதன்பின்னர் அரசுகள் பலமுறை முயன்று 2010ல் மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் மட்டும் மசோதாவை நிறைவேற்றியது. 

இதையும் படிக்க | மதச்சார்பின்மை, சோசலிசம் - இரு வார்த்தைகளும் இல்லை! காங்கிரஸ் குற்றச்சாட்டு 

இதன்பின்னர் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி(பாஜக) அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மசோதா நிறைவேற்றப்பட மூன்றில் இரண்டு பங்கு அவை உறுப்பினர்கள் இதற்கு வாக்களிக்க வேண்டும், மேலும் 50% சட்டப்பேரவைகளில் ஒப்புதல் அளிக்க வேண்டும். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு இருந்தது? 

1952 ஆம் ஆண்டு முதல் மக்களவையில் 5% பெண் எம்.பி.க்கள் இருந்தனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சதவீதம் ஒற்றை இலக்கத்திலேயே இருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டுதான் இரட்டை இலக்கமாக (11%) மாறியுள்ளது. 

2019 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 15% பெண்கள் மக்களவையில் இருந்துள்ளனர். 

அதுபோல 2014 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் 12.7% பெண் எம்.பி.க்கள்தான் அதிகபட்சம். 

இதையும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் அரசியல் செய்யும் பாஜக: மக்களவையில் கனிமொழி பேச்சு 

நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெண்களின் சதவிகிதம் இதுவரை 15 சதவிகிதத்திற்குள்ளாகவே இருக்கிறது. 

தற்போதைய 17 ஆவது மக்களவையில் 14.94% பெண்கள். திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் அதிக பெண் எம்.பி.க்களைக் கொண்டுள்ளது. மாநிலங்களவையில் 14.09% எம்.பி.க்கள் பெண்கள். 

எண்ணிக்கையில் மக்களவையில் 78, மாநிலங்களவையில் 24 என மொத்தம் 102 எம்.பி.க்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளனர். 

மாநில சட்டப்பேரவைகளில் சராசரியாக 10% மற்றும் அதற்குக் குறைவாகவே பெண்கள் உள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 5.13% பெண்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT