நாடாளுமன்ற பழைய கட்டடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை காலை குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை பிற்பகலில் புதிய கட்டடத்தில் இரு அவைகளின் அலுவல்களும் தொடங்கவுள்ளன.
இந்த நிலையில், பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை இன்று காலை எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிக்க | மகளிா் உரிமைத் தொகை திட்டம்: சரிபார்க்க தனி இணையதளம் தொடக்கம்
இந்த நிகழ்வில், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட அனைத்துக் கட்சி எம்பிக்களும் கலந்து கொண்டனர்.