இந்தியா

புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஆத்மநிர்பர் பாரத் சின்னமாக மாறும்: பியூஷ் கோயல்

19th Sep 2023 12:22 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஆத்மநிர்பர் பாரத் சின்னமாக மாறும் என நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர் பியூஷ் கோயல் தெரிவித்தார். 

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று இடம்பெயர்வதை முன்னிட்டு, பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு விடைகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. 

இந்திய நாடாளுமன்றத்தின் செழுமையான பாரம்பரியத்தை நினைவுகூரும் விழாவிற்காக பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் வரலாற்று மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் உரையாற்றினார்.

ADVERTISEMENT

படிக்க: என்ன நடந்தாலும் தற்கொலை கூடாது.. வைரலாகும் விஜய் ஆண்டனி விடியோ!

இந்த நிலையில் அவைத் தலைவர் கூறுகையில், 

இந்தியா எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால்,  2047-ம் ஆண்டுக்குள் நாடு வளர்ந்த நாடாக மாறியிருக்கும் . அத்துடன் புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஆத்மநிர்பர் பாரத் சின்னமாக மாறும் என்றும் அவர் கூறினார். 

புதிய கட்டடம் தற்போது நாடாளுமன்ற மாளிகை என அறிவிக்கப்பட்டுள்ளது. விழா முடிந்ததும், சபை நடவடிக்கைகள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT