இந்தியா

மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு: புதிய கட்டடத்தில் தொடங்கியது மாநிலங்களவை!

19th Sep 2023 03:11 PM

ADVERTISEMENT

தில்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மாநிலங்களவையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை பழைய கட்டடத்தில் தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இன்று முதல் முறையாக கூட்டம் நடைபெறுகிறது.

பழைய கட்டடத்தில் இன்று காலை எம்பிக்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்ற அனுபவங்களை பகிர்ந்தனர். தொடர்ந்து, பகல் 12.45 மணியளவில் பேரணியாக புதிய கட்டடத்துக்கு சென்றனர்.

தொடர்ந்து, மக்களவை கூட்டம் பகல் 1.15 மணியளவில் தேசிய கீதத்துடன் முதல் கூட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர்களை வரவேற்று பேசினார்.

ADVERTISEMENT

முதல் கூட்டத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாளை காலை 11 மணிவரை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.45 மணியளவில் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர்களை வரவேற்று பேசி வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT