இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு: காங்கிரஸால் ஏற்க முடியவில்லை!

19th Sep 2023 06:41 PM

ADVERTISEMENT

 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவால் இந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

படிக்க மகளிர் இடஒதுக்கீடு: ஒரே வார்த்தையில் சோனியா காந்தியின் பதில்!

ADVERTISEMENT

பெண்கள் முன்னேற்றத்தில் மோடி தலைமையிலான அரசுக்கு உள்ள முழு ஈடுபாட்டையே இது வெளிப்படுத்துகிறது. வருத்தம் என்னவென்றால், எதிர்க்கட்சியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் மெத்தனமாகவே செயல்பட்டுவருகிறது.

மகளிருக்கான சட்டங்களை காங்கிரஸ் காலாவதியாக விடலாம் அல்லது மசோதா தாக்கல் செய்வதை அவர்காளின் நட்பு கட்சிகள் தடுத்திருக்கலாம். திட்டத்தின் பலனை எடுத்துக்கொள்ள அவர்கள் எந்தசெயலில் ஈடுபட்டாலும் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வராமல் இருக்காது என விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT