இந்தியா

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

19th Sep 2023 12:10 PM

ADVERTISEMENT

வடமேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதையும் படிக்க | வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இதன்காரணமாக, ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT