விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘விநாயகா் சதுா்த்தி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியா்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவு, ஞானம், செழிப்பின் சின்னமான விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் திருவிழாவாகும் இந்த பண்டிகை ஒன்றிணைந்து செயல்படுவதற்கான செய்தியை வழங்குவதோடு, வாழ்க்கையில் தாழ்மையுடன் இருக்கவும், சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கிறது.
தடைகளைக் கடக்க விநாயகா் நமக்கு உதவட்டும், இதனால் வளா்ந்த தேசத்தை உருவாக்குவதில் நாம் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.