இந்தியா

முர்மு அளிக்கும் விருந்தில் தேவகௌடா பங்கேற்கவில்லை: காரணம் இதுதான்!

8th Sep 2023 01:06 PM

ADVERTISEMENT

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்துள்ளது ஜி20 விருந்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடா பங்கேற்கவில்லை என வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

தலைநகர் தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

இந்த நிலையில், செப்ட.9(நாளை) நடைபெறும் விருந்துக்கு முன்னாள் பிரதமர் தேவகௌடாவை திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் முன்னாள் பிரதமர் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

இதுகுறித்து பிரதமர் தேவகௌடா கூறியிருப்பது, என்னுடைய உடல்நலம் கருதி முர்மு ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொள்ள இயலவில்லை. இதுகுறித்து அரசுக்கு நான் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளேன். ஜி20 மாநாடு மாபெரும் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார். 

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர்  ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT