இந்தியா

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி!

27th Oct 2023 05:07 PM

ADVERTISEMENT

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமம், இதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் இன்னும் 2.5 ஆண்டுகளில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், அவரது எக்ஸ் பதிவில், “பிரதமரின் உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டம், இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்ப தகுந்த, முதன்மையான மண்டலமாக மாற்றியுள்ளது. இப்போது இன்னும் 2.5 ஆண்டுகளுள் டாடா நிறுவனம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கான ஐபோன்களை தயாரிக்க தொடங்கவுள்ளது.  விஸ்ட்ரான் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏற்றுக் கொண்ட டாடா குழுமத்திற்கு நன்றி” என அமைச்சர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து உலக அளிப்பு சங்கிலியை தலைமையேற்று உருவாக்கியதற்கு விஸ்ட்ரான் நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஜாமியா மசூதியில் 3-வது வாரமாக தொழுகை ரத்து!

உள்ளூர் தயாரிப்புகளுக்கான பிரதமரின் ஊக்கத்தொகை திட்டம் சாதகமாக அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

உலக அரங்கில் அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வரும் வணிக போரினாலும் ஆப்பிள் உற்பத்தியாளர்கள், இந்தியாவை தங்களின் பன்முகத் தேவைக்கான களமாக பார்ப்பதாலும் இந்த உற்பத்தி திட்டம் சாத்தியமாகவுள்ளது.

தற்போது ஐபோன் உற்பத்தியில் 85 சதவீதம் சீனாவில் உற்பத்தியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.     

ADVERTISEMENT
ADVERTISEMENT