இந்தியா

கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருக்கிறதா?

27th Oct 2023 02:46 PM

ADVERTISEMENT


இந்தியாவில், கிரெடிட் கார்டில் செலவிடுவது 4.23 சதவீதம் குறைந்திருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் இது ரூ.1.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், செப்டம்பரில் ரூ.1.42 லட்சம் கோடியாக சரிந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஜூலை மாதம், கிரெடிட் கார்டில் செலவிடும் தொகை ரு.1.45 லட்சம் கோடியாகக் குறைந்திருந்த நிலையில், இதைவிடவும் செப்டம்பரில் குறைந்திருக்கிறது.

இதையும் படிக்க.. இது என் கடமை.. காஸாவில் குடும்பத்தினரை இழந்த மறுநாள் பணிக்கு வந்த செய்தியாளர்

ஒருபக்கம் கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருந்தாலும், அதே செப்டம்பர் மாதம் பயன்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாம். ஆம், 9.3 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

ADVERTISEMENT

இந்துஸ்தான் வங்கியைத் தவிர, நாட்டில் உள்ள பிற அனைத்து வங்கியின் கிரெடிட் கார்டுகளிலும் செலவினம் குறைந்து உள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டில் செலவிடும் தொகை கிட்டத்தட்ட 8.9 சதவீதம் குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் வங்கியில் 8.4 சதவீதம் குறைந்துள்ளது.

இதையும் படிக்க.. எப்படி இருந்த நான்.. காஸாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

ஒருபக்கம் செலவினம் குறைந்திருக்கும் நிலையில், அதே செப்டம்பரில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 9.3 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது 9 கோடியை முதல் முறையாக தொட்டிருந்தது. 

முதல் இடத்தில் எச்டிஎஃசி உள்ளது. இதன் மொத்த கிரெடிட் கார்டு 1.88 கோடி. செப்டம்பரில் புதிதாக 3 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்கியிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மட்டும் 1.56 கோடியாக உள்ளது. 

இதையும் படிக்க.. கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருக்கிறதா?

வரும் அக்டோபரில் இருந்து பண்டிகைக் காலம் என்பதால், பல பயனாளர்கள் செலவுகளை தள்ளிப்போட்டிருக்கலாம் என்பதால், செப்டம்பரில் கிரெடிட் கார்டில் செலவிடும் தொகை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

வழக்கமாக, கிரெடிட் கார்டு வைத்து ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதே அதிகமாக இருக்கும் என்கிறது புள்ளிவிவரம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT