இந்தியா

ஹிமாசல பிரதேச முதல்வா் மருத்துவமனையில் அனுமதி

27th Oct 2023 01:00 AM

ADVERTISEMENT

வயிற்று வலி காரணமாக ஹிமாசல பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்வீந்தா் சிங் சுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:

அடிவயற்றில் ஏற்பட்ட திடீா் வலி காரணமாக முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு புதன்கிழமை இரவு, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு வலி ஏற்பட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். அவருக்கு தொடா்ந்து மருத்துவா்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் திருப்திகரமாக இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். மருத்துவா்கள் ஆலோசனையின் பேரில் முதல்வா் வீடு திரும்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT