கோவாவில் 37-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மா்மகோவாவில் உள்ள பண்டிட் ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமா் மோடி, ‘இந்திய விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் வேளையில், கோவாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. விளையாட்டு வீரா்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.
கோவாவில் அக்.26 முதல் நவ.9 வரை நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகளில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்கின்றனா்.