இந்தியா

மகாகாளேஷ்வர் கோயில் சுரங்கப்பாதை அக்.5-ல் திறப்பு!

3rd Oct 2023 03:00 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலின் வளாகத்தில் கட்டப்பட்டுவரும் சுரங்கப்பாதை அக்டோபர் 5-ம் தேதி திறக்கப்படுகிறது. 

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாளேஷ்வர் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில், ரூ.241.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை அக்டோபர் 5-ம் தேதி முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அர்ப்பணிக்க உள்ளார். 

மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, 

ADVERTISEMENT

மகாகாளேஷ்வர் கோயிலுக்கு தினமும் குறைந்தது 2 லட்சம் பக்தர்கள் வருகை தருகிறார்கள். திருவிழாக்களின்போது நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் வருகைதரும் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. 

படிக்க: 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கவும், பக்தர்களின் வசதிக்காக மகாகாளேஷ்வரர் கோயிலில் சிறப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை மூலம் தினமும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல முடியும்.

மேலும், கோயிலின் கோபுரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணக்கூடிய சிறப்பு இடமும் உருவாக்கப்படுகிறது. 

மகாகாளேஷ்வர் கோயில் குழு நிர்வாகி சந்தீப் குமார் சோனி கூறியது, 

இத்திட்டத்தின் கீழ், கோயில் வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட சுமார் 700 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அதிநவீன கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன, அங்கிருந்து கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும், என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ஸ்ரீ மஹாகல் மஹாலோக் வழித்தடத்தின் லட்சிய திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT