குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதார நிபுணர்களுக்கும், சமூகத்திற்கும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
ராஜ்கோட் அருகே கோகடல் நகரில் வசிக்கும் 32 வயது இளைஞர் ரஷித் கான் திடீரென மயங்கிவிழுந்த நிலையில் மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கான் என்ற இளம் கூலித்தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
தாரா பர்மர் என்ற 21 வயது இளைஞர் அவரது இல்லத்தில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஜிஐடிசி மெட்டோடாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சமையல்காரராகப் பணியாற்றி வந்த விஜய் சங்கேத்(30) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
படிக்க: தில்லியில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
ராஜ்கோட்டின் புறநகரில் உள்ள கோத்தாரியா நகரில் வசிக்கும் 45 வயதான ராஜேஷ் பட், அக்டோபர் 2ஆம் தேதி காலை 10 மணியளவில் தனது பண்ணையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நேபாளத்தில் வசிக்கும் 35 வயதான லலித் பரிஹார், ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் தினேஷ் ராஜ் கூறுகையில்,
கரோனா தொற்று நோய்க்குப் பிறகு மாரடைப்பால் மரணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளால் அநேக இளைஞர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது திடீர் மாரடைப்புக்குக் காரணமாக அமைவதாக அவர் தெரிவித்தார்.
படிக்க: டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: 50 ஆக உயர்ந்த பலி!