இந்தியா

உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மாயாவதி 

3rd Oct 2023 12:40 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

பிகார் அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் வெளியாகி தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒபிசிகளுக்கு நீதி கிடைக்க இதுதான் முதல் படியாகும் என்று மாயாவதி எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 

ADVERTISEMENT

புறக்கணிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக நாட்டின் அரசியல் ஒரு 
புதிய திருப்பத்தைக் கொண்டுவருவதைப் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார். 

படிக்க: கேரளத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பொதுமக்களின் உணர்வுக்கேற்ப ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக உ.பி. அரசு துவக்க வேண்டும் என்றாலும், மத்திய அரசு தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கு உரியத் தகுதியை வழங்கினால் மட்டுமே இதற்குச் சரியான தீர்வு கிடைக்கும். 

பிகரில் உள்ள நிதிஷ் குமார் அரசு, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை திங்களன்று வெளியிட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 63 சதவிகிதம் ஓபிசி மற்றும் ஈபிசிக்கள் இருப்பதை வெளிப்படுத்தியது. 

தரவுகளின்படி, பிகாரின் மொத்த மக்கள்தொகை 13.07 கோடிக்கு சற்று அதிகமாக இருந்தது, இதில் 36 சதவீதத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகப்பெரிய சமூகப் பிரிவாக உள்ளனர், அதைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.13 சதவீதமாக உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT