இந்தியா

விரைவில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டி மாதிரி தயாரிப்பு

3rd Oct 2023 12:29 PM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் முழு மாதிரி பிஇஎம்எல்(BEML) தொழிற்சாலையில் இருந்து அக்டோபர் மாத மத்தியில் தயாராகவுள்ளன.


ரூ.675 கோடி மதிப்பில், 10 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க பிஇஎம்எல் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  படுக்கை வசதி பெட்டிகள் லைப் சைஸ் மாடல் அக்.20க்குள் தயாராகிவிடும்.

மூன்றடுக்கு 11 ஏசிப் பெட்டிகள் , இரண்டடுக்கு 4 ஏசிப் பெட்டிகள் கொண்ட முன்மாதிரி தயாரிப்பை தொடங்குவதற்கு முன் தயாரிப்பு மாதிரி வடிவமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் முன்மாதிரி இந்த நிதியாண்டில் வெளியிடப்படும்.

இரண்டடுக்கு ஏசிப் பெட்டிகளில் சிறந்த அழகிய வேலைபாடுகளுடன் ரயில் கூரையில் உள்பொதிக்கப்பட்ட விளக்குகள், மேல் படுக்கையில் ஏறுவதற்கு 6 படி ஏணி அமைப்பு மற்றும் அகலமான ஜன்னல் வசதியுடம் வடிவமமைக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் தோன்றும் இந்த வடிவமைப்பானது, கூர்மையான விளிம்புகள் இல்லாததாக இருக்கும்.

ADVERTISEMENT

படுக்கை வசதிக்கான வடிவமைப்பை தயார் செய்ய தற்போதுள்ள பெட்டிகளின் உள்புறத்தை மட்டும்தான் மாற்ற வேண்டும். மற்ற வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் படுக்கைப் பெட்டிகளாக மாற்றும் பணி விரைவாக முடியும். 

ஐசிஃப் கொடுத்த தரவுகளைப் பெற்று பிஇஎம்எல் நிறுவனம்  படுக்கைப் பெட்டிகளுக்கான உட்புற வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.

தொலைதூர வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் விரும்புவதால், முன்மாதிரிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் உற்பத்தியை அதிகரிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. 

வந்தே பாரத் படுக்கைப் பெட்டிகளை தயாரிப்பதற்காக பிஇஎம்எல் மற்றும் பிஇஎம்எல்-Titagarh Wagons JV ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்பந்தம் அளித்துள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிப்பதில் அனுபவம் பெற்ற பிஇஎம்எல், பெங்களூரில் உள்ள தனது தொழிற்சாலையில் வந்தே பாரத் பெட்டிகளை தயாரிக்கவுள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் சில பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு சென்னையில் உள்ள ஐசிஃப்க்கு பணிகள்மாற்றப்படும். இந்தக் கூட்டு முயற்சியால் 80 பெட்டிகள் உருவாக்கப்படவுள்ளன

ஒப்புதல் கிடைத்தப் பிறகு, ஐசிஎஃப்-ல் தயாரிப்பு தொடங்கும். சென்னையில் பெட்டிகள் அமைக்கும் பணியை நிறுவனங்களுக்குத் தொடங்க தொழிற்சாலை இடம் மற்றும் இயந்திரங்களை ஒதுக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை நிறுவனங்கள் தொடங்குவதற்கு, இடம் மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கப்படும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT