இந்தியா

தில்லியில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

3rd Oct 2023 03:17 PM

ADVERTISEMENT

தலைநகர் தில்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. 

தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பிற்பகல் 2.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தில்லி மட்டுமல்லாது மத்திய தில்லி பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்திற்குப் பிறகு தலைநகர் தில்லியில் உள்ள மக்கள் தங்கள் வீடு, அலுவலகங்களை விட்ட வெளியேறினர். மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை என தில்லி போலீஸார் கேட்டுக் கொண்டனர். 

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் குடியிருப்பு அலுவலகங்களில் இருந்தவர்கள் பீதியடைந்தனர். 

ADVERTISEMENT

படிக்க: இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?

போலீஸார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 

மக்கள் உயரமான கட்டடங்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறவும், பீதியடைய வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம்.

மேலும், ஏதேனும் அவசர உதவிக்கு 112 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு போலீஸார் பதிவிட்டுள்ளனர். 

தில்லியில் மட்டுமின்றி சண்டிகர், நொய்டா ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பிற்பகல் 2.25 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகுகளாகவும், அதைத்தொடர்ந்து மீண்டும் பிற்பகல் 2.51 மணிக்கு ரிக்டர் அளவில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT