இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: 50 ஆக உயர்ந்த பலி!

3rd Oct 2023 04:20 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

தாகூர்புகூரில் வசிக்கும் பரோஷ் ஷா, கடந்த சில நாள்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் செப்டம்பர் 29ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரோஷ் ஷா உயிரிழந்தார். 

படிக்க: தில்லியில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ADVERTISEMENT

மாநிலத்தில் இந்த ஆண்டு 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT