வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
தர்சாப் மாவட்டத்தில் உள்ள கராச்சோன்கால் பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, பொம்மை போன்ற சாதனம் கிடந்ததைக் கையில் எடுத்து விளையாடி உள்ளனர்.
இந்த சாதனம் திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் பலியாகினர். மேலும் ஒரு குழந்தை காயமடைந்தது.
கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பு இதுவாகும்.
படிக்க: இளைஞர்களிடையே அதிகரித்துவரும் மாரடைப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி!