இந்தியா

காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

2nd Oct 2023 08:42 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 'காந்தி ஜெயந்தி' இன்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியும் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் பலரும் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT